தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டு டாப் நடிகராக இருக்கும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இய்யாகி வரும் GOAT படத்தில் நடித்து வருகிறார். பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல், விடிவி கணேஷ், சினேகா, லைலா, மீனாக்ஷி சவுத்திரி என நட்சத்திர பட்டாளத்தையே இந்த படத்தில் களமிறங்கியுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. டைம் ட்ராவளை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் நடிகர் விஜய்.
சென்னை , கேரளா, ஐதராபாத், மாஸ்க்கோ என படத்தின்படப்பிடிப்பு முழுவீச்சை நடந்தது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் விஜய் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்த சமீபத்தில் கோட் படத்தின் பஸ்ட் சிங்கிள்ஸ் ‘விசில் போடு’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். மேலும் செப்டம்பர் 5 ஆம் தேதி விஜயின் கோட் படம் வெளியாகவுள்ளது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது.
இந்த நிலையில், கோட் படத்தில் நடித்து வரும் நடிகர் மோகன் நேர்காணல் ஒன்றில் படம் குறித்து பேசியுள்ளார். 80-களில் வெள்ளி விழா நாயகன் என்று கொண்டப்பட்டவர் நடிகர் மோகன். இவர் நடித்த படங்கள் அனைத்துமே அடுத்தடுத்து வெள்ளி விழா கொண்டாடியதால் இவருக்கு தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா நாயகன் என்ற பெயர் கிடைத்தது. பல ஹிட் படங்களை கொடுத்து மிகவும் பிரபல நடிகராக வலம் வந்தவர் மோகன்.
ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகர் மோகனை தற்போது கோட் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு மாஸ் என்ட்ரி கொடுக்க வைத்துள்ளார் வெங்கட் பிரபு. படம் குறித்து நடிகர் மோகன் கூறுகையில், “இப்போது தான் GOAT பட ஷூட்டிங் முடித்து மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளேன். இந்த படம் நிச்சயம் மிக சிறந்த படமாக இருக்கும், இந்த படம் விஜய் ரசிகர்கள் அனைவருக்குமே பக்கா விருந்தாக இருக்கப்போகிறது.
இந்த படத்தில் நான் தாடி கெட்டப்பில் நடித்துள்ளேன், மேலும் படத்தில் என்னுடையது மிகவும் சுவாரஸ்யமான கதாபாத்திரம். இதற்கு முன் வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் நடிக்க என்னை பலமுறை அணுகினார், ஆனால் அப்போது என்னால் நடித்துக்கொடுக்க முடியவில்லை. நடிகர் விஜய் மிகவும் சாதாரணமான நல்ல மனிதர். மேலும் இந்த படக்குழுவுடன் பணிபுரிந்த அனுபவம் மிகவும் ஜாலியாக இருந்தது என்று கூறினார்.