அஜித் காதல் மனைவி ஷாலினி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் Good Bad Ugly படத்தில் நடித்து வருகிறார். Good Bad Ugly படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள சில நாட்களுக்கு முன் அஜர்பைஜான் பறந்தார் அஜித். ஆனால் நேற்று அவர் அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பினார், சென்னை திரும்பிய அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஷாலினியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் ஆப்ரேஷன் கவுனில் நடிகர் அஜித்தின் கைகளை பிடித்துக்கொண்டு ஷாலினி எடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஷாலினிக்கு சென்னை மருத்துவமனையில் சிறிய அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், மனைவியை கவனித்து கொள்வதற்காக அஜர்பைஜானில் இருந்து அஜித் சென்னை வந்ததாகவும், ஷாலினி குணமடைந்ததும், மீண்டும் நடிகர் அஜித் அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொள்ளவர் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. ஷாலினியின் போட்டோவுக்கு ரசிகர்கள் பலரும் Get Well Soon என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.