ரஷ்யாவில் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் திடீர் எரிவாயு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவமானது மத்திய ரஷ்யாவின் ஸ்டெர்லிடாமக் நகரில் உள்ள பாஷ்கார்டோஸ்தான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.