இன்று (02) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலையை குறைப்பதற்கு லிடரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.
ஆதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3,690 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 05 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன்,. அதன் புதிய விலை 1,452 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2.3 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 18 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 694 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.