மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் கட்சித் தலைவருமான திரு.ஆர்.சம்பந்தனின் பூதவுடல் நாளை புதன்கிழமை (03) பாராளுமன்ற வளாக முன் மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இறுதி மரியாதைக்காக வைக்கப்படுமென (01) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தலைமையில் பிரதமரின் பங்கேற்புடன் இக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
மறைந்த திரு.ஆர்.சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அனைத்து பணிப்புரைகளையும் பிரதமர் தினேஷ் குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
பாராளுமன்றம் (02) கூடவுள்ளதுடன், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ள நிலையில், நாளை (03) பாராளுமன்றம் கூடாதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.