RCB அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி-20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,842 ரன்களை குவித்துள்ள நிலையில், அண்மையில் நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், ஐபிஎல்-லில், ஆடவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார் என பெங்களூர் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.