சர்வதேச T20 போட்டிகளிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளார். T20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக அவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து விடை பெற்றுள்ளார் விராட் கோலி.
டி20-யில் இது என்னுடைய கடைசி உலகக்கோப்பை. நாங்கள் எதை விரும்பினோமோ அதை சாதித்துள்ளோம். இப்போது இல்லையென்றால் எப்போது இல்லை என்ற சூழலை எதிர்கொண்டோம். அடுத்த தலைமுறைக்கு வழிவிட வேண்டிய நேரம் வந்து விட்டது. இது என்னுடைய 6 ஆவது உலகக்கோப்பை போட்டி. ரோஹித் சர்மாவுக்கு இது 9 ஆவது உலகக்கோப்பை போட்டி. கோப்பையை வெல்ல அவர் தகுதியானவர். என்று கூறினார்.