கனடாவில்(Canada) உள்ள நகரமொன்றில் முற்றிலும் இலவச பல்பொருள் அங்காடி ஒன்று திறக்கப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு குடும்பத்துக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.
கனடாவின் சஸ்காட்சுவான் (Saskatchewan) மாகாணத்திலுள்ள ரெஜினா (Regina) நகரில் அமைந்துள்ள ரெஜினா உணவு வங்கியின் வாடிக்கையாளர்களுக்காகவே இந்த ஏற்பாடு செய்யப்படுள்ளது.
கோவிட் தொற்றின் பின்னர், கனடாவில் உணவு வங்கிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.