இலங்கை கடற்படையின் வடக்கு பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அத்மிரல் ரோஹித்த அபேசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை, ஆளுநர் செயலகத்தில் (26/06/2024) சிநேகபூர்வ ரீதியாக சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
யாழ் குடாநாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கும், தீவு பகுதி மக்களுக்கான மருத்துவ வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் தொடர்பில்இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.