ஜிம்பாப்வே-வுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாத்தில் ஜிம்பாப்வே-வுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடர் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார், ரியான் பரக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள அணியிலிருந்து யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், உலகக் கோப்பைத் தொடருக்கான தயார்நிலை வீரரான ரிங்கு சிங், கலீல் அகமது ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியில், ருதுராஜ் கெய்க்வாட், துருவ் ஜுரேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான் கலீல் அகமது , முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகீல் அகமது , துஷார் தேஷ்பாண்டே