ஹட்டன் – அவிசாவளை வீதியில் கினிகத்தேன கடவல பகுதியில் அரச பேருந்து ஒன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் நேற்று (23) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பஸ் ஒன்றும், ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதுடன், லொறியின் சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர்.