வருடந்தோறும், மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான இலங்கை சங்கத்தினால் (Sri Lanka Association for Software Services Companies) தேசிய ரீதியில் நடைபெறும் SLASSCOM INGENUITY விருது வழங்கல் விழாவில் UpBright Edutech நிறுவனமானது Best Innovative Product/ Project in E-commerce & Retails பிரிவில் Ub-course Learning Management system தை அறிமுகம் செய்து இரண்டு விருதுகளை வென்றது. மாகாண ரீதியாக இப்பிரிவில் முதலாவது இடத்திற்கான விருதையும், தேசிய விருது பிரிவில் பல முன்னணி மென்பொருள் நிறுவனங்களை வென்று தேசிய விருதையும் பெற்று, கிழக்கு மாகாணத்திற்கு மகுடத்தை ஈட்டித் தந்தமை குறிப்பிடத்தக்கது.
SLASSCOM Ingenuity Awards 2024 விழாவானது கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் புதன்கிழமை (19)ம் திகதி இடம்பெற்றது. குறித்த விழாவில், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், இலங்கையில் முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் 10 பிரிவுகளுக்கான தேசிய மற்றும் மாகாண விருது பிரிவுகளில் போட்டி ஈட்டியமை குறிப்பிட்ட தக்கது. நாடளாவிய ரீதியில் பெயர் நாமம் பூத்த பல நிறுவனங்கள் மத்தியில் போட்டி ஈட்டி, தேசிய மற்றும் மாகாண ரீதியில் முதல் தடவையாக இரண்டு விருதுகளை வென்றமை UPBRIGHT Edutech நிறுவனத்தின் நான்கு வருட கால முயற்சியில் உன்னத வெளிப்பாடாகும். UpBright Edutech நிறுவனம் இளம் தொழில்முயற்சியாளர்களான MFM.அஸ்பர் மற்றும் ZAM.அஸாம் ஆகிய இருவரின் கனவின் வெளிப்பாடாக உதித்து சுமார் 3500 மாணவர்களுடன் வெற்றிப்பாதையில் பயணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.