தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் T20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவிருந்த போட்டி கைவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ஃப் மைதானத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் இந்த போட்டியை கைவிட நடுவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய, இலங்கை மற்றம் நேபாளம் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்பட்டுள்ளது.