பாணந்துறை, பின்வத்த – நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட இரசாயன கசிவு காரணமாக சுமார் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தில் கலவை தயாரிப்பில் ரசாயன பொருள் மாறியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இரசாயன கசிவின் பின்னர், குறித்த தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.