வவுனியா மாவட்டத்தில் புதிதாக நியமனம் பெற்றுள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கான அறிமுகப்பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்

………………………………………………………………………………………………………………………..

வவுனியா மாவட்டத்தில் புதிதாக நியமனம் பெற்றுள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கான 90 மணித்தியால அறிமுகப்பயிற்சி வகுப்புகள் மாவட்ட செயலாளர் திரு.பி.ஏ.சரத்சந்ர தலைமையில் 2024.06.10 அன்று ஆரம்பமாகியுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் புதிதாக நியமனம் பெற்றுள்ள 17 கிராம உத்தியோகத்தர்களுக்கான குறித்த பயிற்சியானது தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (2024.06.10) முன்னெடுக்கப்பட்ட குறித்த அறிமுகப்பயிற்சி ஆரம்ப நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் திரு.தி.திரேஸ்குமார் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் திரு.S.அரவிந்தன் ஆகியோரும் கலந்தகொண்டிருந்தனர்.