மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக நியமனம் பெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறியானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (10) திகதி இடம் பெற்றது.
மாவட்டத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட 86 கிராம உத்தியோகத்தர்களிற்கான மூன்றுமாத பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினிஸ்ரீகாந்த் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அரச சட்ட திட்டங்களுக்கு அமைவாக புதிதாக நியமனம் பெற்ற கிராம உத்தியோகத்தர்கள் மக்களுக்கு எந்நேரத்திலும் கடமையாற்றுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றார்.
மேலும் இவர்களுக்கான பயிற்சியினை மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் கிராம நிருவாக உத்தியோகத்தர் கே.ராஜன் மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.