முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தின் இந்த ஆண்டுக்கான இரண்டாவது ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் (11) துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 09.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான கௌரவ காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.
துணுக்காய் பிரதேச செயலாளர் திரு இராமதாஸ் ரமேஸ் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் துணுக்காய் பிரதேசத்தின் சுகாதாரம், கல்வி, விவசாயம்,காணி, வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம் தொடர்பான பிரச்சினைகள் முதன்மையாக கலந்துரையாடப்பட்டு சில தீர்மானங்கள் எட்டப்பட்டதுடன் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இக்கலந்துரையாடலில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மல்லாவி வைத்திய அத்தியட்சகர், நீர்ப்பாசன பொறியியலாளர், கல்வி அதிகாரிகள், ஏனைய திணைக்கள தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.