T20 உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டில் 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணி இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட நமீபியா அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 72 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் ஹெகார்ட் எராஸ்மஸ் அதிகபட்சமாக 36 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் எடம் சம்பா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்நிலையில், 73 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 5.4 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவுஸ்திரேலியா அணி சார்பில், ட்ரவிஸ் ஹெட் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
போட்டியின் ஆட்டநாயகனாக எடம் சம்பா தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலியா அணி B குழுவில் 6 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.