ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் வேன் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கினிகத்தேன மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர் .
செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது என கினிகத்தேன பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் வேனில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கினிகத்தேன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளதோடு பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
மஸ்கெலியா நிருபர்.