T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் 09 விக்கெட்டுக்களை இழந்து 103 ஓட்டங்களை பெற்றது.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பில் அதிகபடியாக டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களை பெற்றார்.