T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 36 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
பிரிட்ஜ் டௌனில் நேற்று இரவு இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் டேவிட் வார்னர் அதிகபட்சமாக 39 ஓட்டங்களையும், அணித்தலைவர் மிச்சேல் மார்ஷ் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ஜோர்டான் 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
அந்த அணி சார்பில் அணித்தலைவர் ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 42 ஓட்டங்களையும், பில் சால்ட் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ் மற்றும் சம்பா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.