பங்களாதேஷ் 02 விக்கெட்டுக்களால் வெற்றி..!!

2024 T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி 02 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, பங்களாதேஷ் அணிக்கு 125 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

அதன்படி, 125 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

பந்து வீச்சில் நுவான் துஷார நான்கு விக்கெட்டுக்களையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.