இந்திய கிரிக்கெட் அணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐசிசி கோப்பை எதையும் வெல்லாத நிலையில் இந்த ஆண்டு உலக கோப்பை டி20 கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது.
ஒவ்வொரு அணிகளும் சிறந்த வீரர்களை உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்துள்ளன. 20 ஓவர் போட்டிகளில் பௌலர்களால் முக்கிய விளைவுகளை ஏற்படுத்த முடியும். இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேன்கள் பலர் இருக்கின்றனர். நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் எனக்கு மட்டும் இல்லாமல், எல்லா அணிகளிலும் உள்ள பேட்ஸ்மன்களுக்கு ஜஸ்பிரித் பும்ரா ஓர் அச்சுறுத்தலாக இருப்பார் என்று கருதுகிறேன் என கூறியுள்ளார்.