வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. மொத்தம் 3 ஒரு நாள் போட்டிகளும், மூன்று டி20 போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் மிர்பூரில் முறையே வரும் ஆகஸ்ட் 17 மற்றும் 20 ஆம் தேதியும் 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதியும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல் முதல் டி20 போட்டி மட்டும் ஆகஸ்ட் 26-ல் சட்டோகிராமிலும், அடுத்த இரண்டு டி20 போட்டிகள் அதே மாதம் 29 மற்றும் 31ஆம் தேதி மிர்பூரிலும் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.