பாட்டல் ராதா படத்துடைய ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் குரு சோமசுந்தரம் முன்னணி கேரக்டரில் நடித்த பாட்டல் ராதா என்ற திரைப்படம் கடந்த 24ஆம் தேதி வெளியானது.
இந்த படத்தில் சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். ரஞ்சித்துடைய உதவி இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இந்த பாட்டல் ராதா படத்தை இயக்கினார்.
தியேட்டரில் இந்த திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பாட்டல் ராதா திரைப்படம் இம்மாதம் 21ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மது பழக்கம் அதிகம் கொண்ட ராதாமணி என்ற கேரக்டரில் குரு சோமசுந்தரம் இந்த படத்தில் நடித்துள்ளார்.
மதுவுக்கு அடிமையான ராதாமணி ஜான் விஜய் நடத்தும் மது மறுவாழ்வு மையத்தில் சேர்கிறார். அங்கிருந்து தனது நண்பர்கள் சிலரு சிலருடன் தப்பிக்கும் ராதாமணியின் கதை பின்னர் என்ன ஆனது என்பதுதான் இந்த பாட்டில் ராதா திரைப்படம்.