நோர்வே தூதுவர் H.E. May-Elin Stener மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இன்று (19) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின் போது, தற்போதைய இலங்கையின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடினர். தற்போதைய வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கத் தேவையான உதவிகளை வழங்குமாறும், அதற்கு எதிர்க்கட்சி என்ற முறையில் முழு ஆதரவை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நோர்வே தூதுவரிடம் தெரிவித்தார்.