இந்திய – ஆஸி போட்டி சமநிலையில் முடிவு

இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே பிரிஸ்பேனில் இடம்பெற்ற 3ஆவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவு பெற்றுள்ளது.

இன்றைய ஐந்தாவது நாளில் இந்திய அணியின் வெற்றிக்கு 275 ஓட்டங்கள் பெறவேண்டி இருந்த நிலையில், போட்டி மழை காரணமாக தடைப்பட்டதோடு ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 445 ஓட்டங்களையும், இந்திய அணி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக 260 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.

பின்னர், தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 7 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 89 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

பின்னர், 275 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி விக்கட் இழப்பின்றி 8 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில், போட்டி மழையால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.