பிரபல தபேலா இசைமேதை சாகிர் ஹுசைன் காலமானார்

பிரபல தபேலா இசைமேதை சாகிர் ஹுசைன் அமெரிக்காவில் காலமானார்.

பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன் (73) நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளுக்காக அமெரிக்கா, சென்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சாகிர் ஹுசைன், அமெரிக்காவில் வசித்து வந்துள்ள நிலையில், அவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த ஒரு வாரமாக சாகிர் ஹுசைன் மருத்துவமனையில் சிச்சை பெற்று வருவதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது.

சாகிர் உடல்நிலை குறித்து அவரது நண்பர் ராகேஷ் கூறுகையில், “அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். தற்போது ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் அனைவரும் அவரது நிலைமை குறித்து கவலைப்படுகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாகிர் ஹுசைன் சிகிச்சை பலனின்றி உயரிழிந்தார்.