சுகயீனம் காரணமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்புக்கு சென்ற சமயம் , சுயநினைவற்று மயங்கி விழுந்த நிலையில் , கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளளார்.
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை வகிக்கும் சிவாஜிலிங்கம் கடந்த காலங்களில் எடுத்த அரசியல் தீர்மானங்களினால் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
2004ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்குத் தெரிவானவர்.