இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 109 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இன்றைய 5ஆவது நாளில் 348 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 238 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 358 ஓட்டங்களையும், இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸிற்காக 328 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.
அதற்கமைய, தென்னாபிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக 328 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து 348 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 317 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியுள்ளது.
தென்னாபிரிக்க அணியின் இந்த வெற்றியின் ஊடாக 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் அந்த அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் ஊடாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் இலங்கை அணியின் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.