5 லட்சம் ரன்களை எடுத்த இங்கிலாந்து அணி..!

147 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் மற்ற எந்த அணியும் எளிதில் நெருங்க முடியாத சாதனையை இங்கிலாந்து அணி ஏற்படுத்தியுள்ளது. இதனை அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இங்கிலாந்து அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

இனி நிலையில் 147 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் 5 லட்சம் ரன்களை எடுத்த ஒரே அணி என்ற சாதனையை இன்று இங்கிலாந்து ஏற்படுத்தியுள்ளது. இந்த சாதனையை ஏற்படுத்த இங்கிலாந்து அணிக்கு 1082 டெஸ்ட் போட்டிகள் தேவைப்பட்டன.

இந்த சாதனை பட்டியலில் 4 லட்சத்து 28 ஆயிரத்து 688 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய அணி மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 78 ஆயிரத்து 751 ரன்கள் எடுத்திருக்கிறது.