ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பல வருடங்களாக ஆசிய கிரிக்கெட் சபையின் நிதி மற்றும் சந்தைப்படுத்தல் குழுவின் தலைவராக செயற்பட்டு வந்துள்ளார்.
முன்னதாக, ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா இருந்தார்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவராக கடந்த வாரம் ஜெய் ஷா பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.