கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து குதித்து வெளிநாட்டவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கடந்த 3ஆம் திகதி இந்த வெளிநாட்டவர் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 51 வயதுடைய அவுஸ்திரேலிய நபரொருவரே உயிரிழந்துள்ளதாகவும், அவர் ஒருவித மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குறித்த நபர் 7வது மாடியில் இருந்து கீழே குதிக்க முயல்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று அந்த இடத்திற்கு சென்று அவரை தடுக்க முற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவர் பொலிஸ் அதிகாரிகளையும் தாக்கி, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த வெளிநாட்டவர் தங்கியிருந்த இடத்தின் சொத்துக்களையும் அவர் சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.