ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கை U19 குழாமில் தமிழ்பேசும் வீரர்கள்..!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) ஆரம்பமாகவிருக்கும் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பேர் அடங்கிய இந்தக்குழாத்தின் தலைவராக கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி வீரரான விஹாஸ் தேவ்மிக்க நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். மறுமுனையில் இந்தக் குழாத்தில் தமிழ் பேசும் வீரர்களான சாருஜன் சண்முகநாதன், யாழ். மாவட்ட வீரர்களான மாலிங்க பாணியில் பந்துவீசும் குகதாஸ் மாதுளன் மற்றும் ரஞ்சித் குமார் நியூட்டன் ஆகியோரும் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.

50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடைபெறும் 19 வயதின் கீழ்ப்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இம்முறை 8 அணிகள் பங்கேற்கவிருப்பதோடு, இலங்கை குழு B இல் போட்டியிடுகின்றது.

அத்துடன் இலங்கை அணி தமது முதல் போட்டியில் நேபாளத்தினை எதிர்வரும் 29ஆம் திகதி துபாய் நகரில் வைத்து எதிர்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.