மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு!

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நேற்று வரை 2 வான்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று அதிகாலை மேலும் ஒரு வான்கதவு திறக்கப்பட்டது.

இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்து ரம்மியமாக காட்சியளிக்கின்றது.

அத்துடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அத்தோடு, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது.

அந்த வகையில் விமலசுரேந்திர நீர்தேக்கத்தின் அணைக்கட்டிற்கு மேலாக நீர் வெளியாகுவதோடு, காசல்ரீ நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும்படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.