கொழும்பு கிருலப்பனை பிரதேசத்தில் உள்ள தற்காலிக விடுதியில் தங்கியிருந்த 26 வெளிநாட்டவர்கள் இன்று (26) குடிவரவு திணைக்கள புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளதுடன் அவர்களில் 23 ஆண்களும் 03 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 16 பங்களாதேஷ் பிரஜைகள், 02 பாகிஸ்தானிய பிரஜைகள், 02 புருண்டி பிரஜைகள் மற்றும் இந்திய, பிலிப்பைன்ஸ், உகாண்டா, எத்தியோப்பியா, கென்யா மற்றும் நேபாள பிரஜைகள் தலா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.