சீனக் கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர்-சஜித் சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக் குழுவினர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுவின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான திணைக்களத்தின் (IDCPC) துணை அமைச்சர் சன் ஹையன் (Sun Haiyan) தலைமையிலான சீனத் தூதுக்குழுவினர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (26) சந்தித்து கலந்துரையாடினர்.

சீன தூதுக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுவின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான திணைக்களத்தின் (IDCPC) துணை அமைச்சர் சன் ஹையன் (Sun Haiyan), சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் Lin Tao, பணிப்பாளர் Li Jinyan, பிரதிப் பணிப்பாளர் Wen Jun, துணை அமைச்சரின் செயலாளர் Jin Yan, மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரியும் Zhang Guyu ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் நட்புறவை மேலும் பேணுவது குறித்து அவதானம் செலுத்திய சஜித் பிரேமதாச, தற்போதைய வங்குரோத்து நிலையிலிருந்து இலங்கை வெளிவருவதற்குத் தேவையான ஒத்தாசையையும் தலையீட்டையும் தொடர்ந்து வழங்குமாறும் சீனப் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவராமான சஜித் பிரேமதாச, ஹர்ஷன ராஜகருணா, வைத்தியர் காவிந்த ஜயவர்தன, எஸ். எம். மரிக்கார் மற்றும் கயந்த கருணாதிலக உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் ரத்நாயக்க அபேரத்ன மற்றும் சஹன் கிரிந்தகே ஆகியோரும் இச்சந்திப்பில் பங்குபற்றினர்.