மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு

மேல்கொத்மலை நீர்தேக்க பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் இன்று (26) திறந்து விடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், அதிக மழையுடனான காலநிலை தொடருமாயின், ஏனைய வான்கதவுகளும் திறக்கப்படும். எனவே, மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவுகளும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதுடன், உயர்தர பரீட்சார்த்திகளும், பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.