மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன்
பல வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளதன.
பல்வேறு வகையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள், பண்ணையாளர்கள் மற்றும் விவசாயம் செய்யும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சகல நீர் தேக்கங்களின் நீர் மட்டங்களும் வெகுவாக உயர்ந்து வருகிறது.
எந்நேரத்திலும் பல நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் காரணமாக தாழ்நில பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மணல் திட்டான பகுதிகளில் உள்ள மக்கள் மிக மிக அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.
ராகல, கந்தபொல, நுவரெலியா, டயகம, சாமிமலை, லக்சபான, வாழமலை, நல்லதண்ணி, ஆகிய பகுதிகளில் கனத்த மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
மஸ்கெலியா நிருபர்.