நடராஜனுக்கு ரூ.10.75 கோடி..!

ஐபிஎல் மெகா ஏலத்தின்போது தமிழக வீரர் நடராஜனுக்கு (T Natarajan)அதிக டிமாண்ட் காணப்பட்டது. அவரை எடுப்பதற்கு 3 அணிகளுக்கு இடையே போட்டி காணப்பட்ட நிலையில், ரூ. 10.75 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது.

2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 10 ஐபிஎல் அணிகள் பங்கேற்றுள்ளன.

ரூ. 10.75 கோடிக்கு நடராஜனை வாங்கியது டெல்லி அணி. கடந்த முறை ரூ. 4 கோடிக்கு அவரை ஐதராபாத் அணி வாங்கியிருந்த நிலையில், தற்போது அவர் ரூ. 10.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார். இதையொட்டி நடராஜனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.