ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பந்த் ரூ. 27 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டுள்ளார். ஏலத்தின்போது அவரை எடுப்பதற்கு 3 அணிகள் கடுமையாக போட்டி போட்டன.
2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 10 ஐபிஎல் அணிகள் பங்கேற்றுள்ளன.
ரிஷப் பந்திற்கு 3 அணிகள் போட்டி
டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ரிஷப் பந்த்தை அணியில் எடுப்பதற்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி அணிகள் போட்டியிட்டன.
ஏலத்தின்போது ரிஷப் பந்த் மீதான விலையை லக்னோ மற்றும் ஐதராபாத் அணியின் உரிமையாளர்கள் 25 லட்ச ரூபாயாக உயர்த்திக் கொண்டே சென்றனர். லக்னோ அணி ரூ. 20.75 கோடி நிர்ணயித்தபோது, அதற்கு மேல் சன்ரைசர்ஸ் அணி ஆர்வம் காட்டவில்லை.
அப்போது ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி தக்க வைத்துக் கொள்ள விருப்பமா என டெல்லி அணியிடம் கேட்கப்பட்டது. அதற்கு டெல்லி சம்மதித்தபோது, ரூ. 27 கோடியை ரிஷப் பந்திற்கு லக்னோ அணி அறிவித்தது. அதனை செலுத்த டெல்லி அணி நிர்வாகம் ஆர்வம் காட்டாததால், ரூ. 27 கோடிக்கு ரிஷப் பந்த் லக்னோ அணிக்கு வழங்கப்பட்டுள்ளார்.