யாழ்ப்பாணம் – உடுவில் மகளிர் கல்லூரியின் 200 வது ஆண்டு நிறைவு விழா துவிச்சக்கர வண்டிப்பவனி, வாகனப் பவனி மற்றும் நடைபவனி நேற்று இடம்பெற்றது.
நேற்றுக் காலை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இருந்து துவிச்சக்கர வண்டிப்பவனி, நடைபவணி மற்றும் வாகனப்பவனி என்பன காங்கேசந்துறை யாழ்ப்பாணம் வீதி ஊடாக மல்லாகம், சுன்னாகம், மருதனார்மடம் சாந்தியை வந்தடைந்து பாடசாலை சென்றடைந்தது.
நிகழ்வில் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலாநிதி வே.பத்மதயாளன், கல்லூரியின் அதிபர் றொசானா, முன்னாள் அதிபர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.