இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவினர் இன்று (21.11.2024) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அவர்களை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலான இந்திய அரசின் எதிர்கால செயற்பாடுகள், பங்களிப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சிவஞானம் ஶ்ரீதரன், கட்சியின் நாடாளுமன்ற குழுவின் கொரடாவும், பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய இரா.சாணக்கியன், ஞா.ஶ்ரீநேசன், ச.குகதாசன், க.கோடீஸ்வரன், து.ரவிகரன், இ.சிறிநாத் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.