மீண்டும் இணையும் சூர்யா-த்ரிஷா

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

இம்மாத இறுதியில் ‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதில் சூர்யாவுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது நாயகியாக த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் ‘சூர்யா 45’. இன்னும் இப்படத்துக்கு பெயரிடப்படவில்லை. இதற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரியவுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முன்னதாக சூர்யா – த்ரிஷா ஜோடி ‘மெளனம் பேசியதே’ மற்றும் ‘ஆறு’ ஆகிய படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த ஜோடி ‘சூர்யா 45’ படத்தில் இணைந்து நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.