பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை..!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் 13ஆம் திகதியுடன் நிறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அனைத்துப் பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 02ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.