மன்னாரில் இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மகற்பேறுக்காக சேர்க்கப்ட்டு மரணித்த இளம் தாயினதும் சிசுவினதும் மரணம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரனை அறிக்கைகைள் சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளருக்கு மூன்று தினங்களுக்குள் அனுப்பி வைக்கப்பட்டு அனுமதி பெற்ற பின்பு குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பட்டித்தோட்டத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் வனஜா என அழைக்கப்படும் ஜெ. ராஜஸ்ரீ (வயது 28) ஒருவரை திங்கள் கிழமை (18) அதிகாலை மன்னார் பொது வைத்தியசாலையில் மகற்பேறுக்காக சேர்த்திருந்த நிலையில் செவ்வாய் கிழமை (19) மாலை பிரசவம் நடைபெற்றபோது சிசுவும் தாயும் இறந்துள்ளனர்.

இதற்கு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் கவனயீனமே இந்த மரணங்களுக்கு காரணம் என அந்நேரத்திலிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மக்கள் முற்றுகையிட்டு கடும் மழையின் மத்தியிலும் நீதிகோரி கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையிட்டு வைத்தியசாலையில் கடும் பாதுகாப்பு ஏற்படுத்தப்படிருந்தது. அப்படியிருந்தும் சடலங்கள் இரண்டும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் புதன் கிழமை (20) மாலை 4 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை மக்கள் ஒன்று திரண்டு ஒரிரு கோரிக்கைகளை முன்வைத்து இறப்புக்கு நீதிகோரி கடும் போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.

இதற்கிடையில் மன்னார் மாவட்ட செயலகதத்pல் இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் ஒன்று இடம்பெற்றபின் இவ் குழுவினர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து இங்கும் பங்கு தந்தையர் . சிவில் பொது அமைப்பினர் . இறந்தவரின் தாயார் , உறவினர்கள் , சட்டத்தரணிகள் மற்றும் அதிகாரிகளுடனும் கருத்தாடல் இடம்பெற்றது.

இதில் வனஜா என்ற தாயினதும் சிசிவினதும் மரணம் அடைந்தமை தொடர்பாக பூரண விசாரனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

-இந்த வகையில் மத்திய சுகாதார அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு குழுக்கள் மன்னார் வருகை தந்து பூர்வாங்க விசாரனையை புதன்கிழமையே (20) நிறைவு செய்துள்ளதாகவும் இவர்கள் வியாழக்கிழமை (21) சுகாதார அமைச்சின் செயலாளருக்கு தம்முடைய அறிக்கையினை கையளிக்க இருப்தாக எனவும்,

இதனைவிட வடக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளரினால் அமைக்கப்பட்ட மூன்றுபேர் கொண்ட குழுவினரும் மூன்று தினங்களுக்குள் தங்கள் அறிக்கையை சமர்பிக்க இருப்தாகவும் தெரிவிக்கப்பட்டது.

மூன்று குழுக்களினாலும் சமர்பிக்கப்படும் அறிக்கைகள் சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அனுமதி பெற்ற பின்பு இனம் காணப்படுகின்ற குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் எழுத்து மூலமாகவும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்பொழுது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினால் வழங்கப்ட்டு வரும் சுகாதார சேவையினை தொடர்ந்து எவ்விதடங்களும் இன்றி தொடர்ந்து நடைபெறுவதற்கான முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டுள்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(வாஸ் கூஞ்ஞ)