நானுஓயா கிளரண்டன் தோட்டத்தில் ஐயப்பன் ஆலயத்தில் கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று பக்தர்கள் மாலை அணித்து ஐயப்பன் தரிசனம்.
ஐயப்பன் கடவுளின் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் இன்று (16) சனிக்கிழமை நானுஓயா கிளரண்டன் கீழ் பிரிவில் அமைத்துள்ள ஆலயத்தில் விரதம் இருத்து மாலை அணித்துக்கொண்டனர்.
ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதம் தொடங்கியதிலிருந்து 48 நாட்களுக்கு விரதம் இருந்து சபரி மலைக்குச் சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம். இன்று கார்த்திகை மாதப் பிறப்பைத் தொடர்ந்து கிளரண்டன் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் தொடங்கினர்.
கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. நானுஓயா உள்ள கிளரண்டன் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் திரண்டு வந்து மாலை அணிந்து கொண்டனர்.
தொடர்ந்து கணபதி ஓமம் நடைபெற்றது அதை தொடர்ந்து மாலை அணிந்து அதன் பின் ஐயப்பன் பூஜை இடம்பெற்று ஐயப்ப பஜனை நடைபெற்ற பின் பூஜையில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு விஷேட அபிஷேகத்துடன் ஐயப்பன் பூஜைகள் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வி.தீபன்ராஜ்