ஜனநாயக ரீதியாகவும், அமைதியான முறையிலும் மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க இடமளியுங்கள்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச

பொதுத் தேர்தல் ஜனநாயக மற்றும் அமைதி முறையான, மக்களின் உரிமைகளை முதன்மைப்படுத்தும் சுதந்திரமான தேர்தலாக அமையட்டும். சுதந்திரமாக மக்கள் தங்கள் கருத்துகளையும் விருப்பங்களையும் தெரிவிக்க சந்தர்ப்பம் கிட்டட்டும் என
சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமானது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று காலை ராஜகிரிய, கொடுவேகொட விவேகாராம விகாரை, சந்திரலோக தஹம் பாடசாலை கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.