நாளை நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்காக வாக்களிப்பதற்காக தகுதி பெற்ற 90607 வாக்காளருக்கான வாக்குபெட்டிகளை வாக்குசாவடிகளுக்காக மு .ப 10 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு க.கனகேஸ்வரன் மற்றும் மன்னார் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் திரு.வே.சிவராஜா அவர்களின் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வாக்களிக்க தகுதிபெற்றவர்களில் 4171 வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களித்துள்ளனர் மேலும் தேர்தல் கடமைகளுக்காக 2166 அரச அதிகாரிகளும் 563 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.