கண்டி நித்தவளை ஶ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் மஹா சூர சம்ஹார திருவிழா..
கந்த சஷ்டி தினத்தன்று காலை விநாயகர் வழிபாடு, முருகப்பெருமானுக்கு திரவிய அபிஷேகம், திரவிய ஓமம் என்பன நடைபெற்றன.
பின்னர் விஷேட பூஜையுடன் மாலை 3.30 மணியளவில்
ஆலய வளாக மைதானத்தில் மஹா சூர சம்ஹார பெருவிழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
நேற்றைய தினம் விநாயகர் வழிபாடு, வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்று இரவு திருவூஞ்சள் நிகழ்வும் நடைபெற்றது.